FIGHT CLUB - Lokesh Kanagaraj [File Image]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
அந்த வகையில், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘G squad’ பேனரில், உறியடி மற்றும் உறியடி 2 என சமூக பிரச்னைகளை பேசும் படங்களை இயக்கி, நடித்த விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (நவம்பர் 29) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, படக்குழு அதிரடி போஸ்டருடன் பாடத்தின் தலைப்பையும் வெளியிட்டுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேனரில் வெளியிடப்படும் முதல் படமான இந்த படத்துக்கு ‘FIGHT CLUB’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பு ஏற்கனவே ஹாலிவுட் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இனி அரைத்த மாவை அரைக்க மாட்டேன்…அஜித் குமார் எடுத்த அதிரடி முடிவு.! ஏகே 63 அப்டேட்…
இந்த படத்தை ரீல் குட் பிளம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் என்பதாலும், உறியடி நடிகர் அவரது நண்பர் என்பதாலும், இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பித்தக்கது.
இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக யார் நடிக்கும் படத்தை தயாரிக்க போகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக ரத்னகுமார் இயக்கும் ஒரு படத்தை தான் தயாரிக்கவுள்ளாராம். ரத்னகுமார் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளாராம், அதைப்போலவே நயன்தாராவும் அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாதாக கூறப்படுகிறது.
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…