பிரபல நடிகை மீது புகார் கொடுத்தார் தயாரிப்பாளர் பாரத்படேல்!!!
சன்னிலியோன் இவர் பிரபல பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் ஆபாச திரைப்பட நடிகையுமாவார். இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ‘ ஜிம்ஸ் 2’என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பாரத் படேல் நடிகை சன்னிலியோன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதாவது ஒரு படத்தில் நடிப்பதாக கூறி , அட்வான்ஸ் வாங்கிய பின்பு படத்தில் நடிக்காமல் பணத்தையும் திருப்பி தர முடியாது என்று சன்னி லியோன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் பாரத் படேல் நடிகை சன்னிலியோன் மீது புகார் கொடுத்துள்ளார்.