பத்து தல படத்திற்காக சிம்புவை 20 கிலோ எடை ஏற்ற கேட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர். அதற்கு சிம்பு தரப்பு மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிலம்பரசன் தற்போது தான் தனது பழைய நிலைக்கு வந்துள்ளார் என ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். முன்னர் சிம்பு எடை கூடி, இது சிம்புதானா என கேட்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் குண்டாக இருந்தார்.
மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக வெற்றிபெற வில்லை. அதன் பின்னர், கடுமையான உடற்பயிற்சிகள் செய்து மீண்டும் தனது ஸ்லிம் உடற்கட்டிற்கு வந்து ஸ்டைலான சிம்புவாக மாறியுள்ளார். அந்த ஸ்லிம் தோற்றத்தில் வரும் வாரம் ரிலீஸ் ஆக உள்ள மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது.
மேலும், அடுத்தடுத்த பட ஷூட்டிங்கில் பிஸியாகியுள்ளார் சிம்பு. அவர் குண்டாக இருக்கும் போது பத்து தல எனும் படத்தை ஆரம்பித்தனர். அதில் சிம்பு நீண்ட கௌரவ தோற்றம் போல, ஒரு டான் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. கெளதம் கார்த்திக் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார்.
தற்போது மீண்டும் அந்த பட ஷூட்டிங் ஆரம்பிக்க பத்து தல தயாரிப்பாளர் விரும்பி, சிம்புவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். அவரும் சரி நடித்து கொடுக்கிறேன் என கூறியுள்ளார். ஆனால், தயாரிப்பாளர் கூறிய ஒரு கண்டிஷனை கேட்டு சிம்பு மட்டுமல்ல அவரது ரசிகர்களும் பேரதிர்ச்சியாகியுள்ளனர்.
காரணம் என்னவென்றால், பத்து தல தயாரிப்பாளர், அந்த படத்தில் சிம்பு டான் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியுள்ளதால், சிம்புவை 20 கிலோ எடை ஏற்றி குண்டாக மாற சொல்லியுள்ளார். சிம்புவே இப்போதான் அந்த குண்டான தோற்றதில் இருந்து ஒல்லியாக மாறி ரசிகர்களை சந்தோசப்படுத்தியுள்ளார். மீண்டும் குண்டாக மாற சொல்லுகிறாரே என சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சிக்குளாகி உள்ளனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…