விஜய் மார்க்கெட்டை விட அதிகமா செலவு பண்ணனும்! கில்லி படத்தை தயாரிக்க யோசித்த தயாரிப்பாளர்?

ghilli
Ghilli : கில்லி திரைப்படத்தை தயாரிக்க முதலில் தயாரிப்பாள ஏ.எம்.ரத்தினம் யோசித்துள்ளார். 

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் தான் கில்லி. விஜயின் சினிமா கேரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றால் இந்த படத்தை கூறலாம். இந்த படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் தான்.

ஆனால், தெலுங்கு படத்தின் ரீமேக் போன்று எடுக்கப்படாமல் புது படம் போல எடுக்கப்பட்டு இருந்தது. அந்த அளவிற்கு படத்தை தரணி அருமையாக எடுத்து இருந்தார். இதனாலே இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படம் சமீபத்தில்  கூட ரீ-ரிலீஸ் செய்யப்பட்டும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்தினம் தான் தயாரித்து இருந்தார். கில்லி படம் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் கில்லி படம் உருவான விதம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது பேசியுள்ளார். முதலில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒக்கடு படத்தை பார்த்துவிட்டு இதனை தமிழில் செய்யலாம் என்று யோசித்தாராம்.

உடனடியாக எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஏ.எம்.ரத்தினம்  வாங்கினால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் பேசினாராம். அதற்கு முன்பே விஜய் தனது தந்தையிடம் இதனை நாமளே வாங்கி தயாரிக்கலாம் அப்பா என்று கூறினாராம். ஆனால், விலை உயர்ந்த பட்ஜெட்டில் எடுக்கப்படவேண்டும் என்பதால் தான் எஸ்.ஏ.சந்திரசேகர்  இதனை ஏ.எம்.ரத்தினம் எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று அவரிடம் பேசினாராம்.

ஏ.எம்.ரத்தினம் முதலில் படத்தை தயாரிக்கவே யோசித்தாராம். ஏனென்றால், அந்த சமயம் விஜயின் மார்க்கெட் செலவை விட இந்த படத்திற்கு அதிகமாக செலவு செய்து எடுக்கப்படவேண்டி இருந்ததாம். எனவே, இந்த படத்தினுடன் சேர்த்து 2 படங்கள் தனக்கு சேர்த்து நடித்து கொடுத்தால் தயாரிக்கிறேன் என்று ஏ.எம்.ரத்தினம் கூறிவிட்டாராம்.

ஏனென்றால், இந்த கில்லி படம் வெளியாகி ஹிட் ஆகிவிட்டது என்றால் அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்திற்கு தான் எதிர்பார்ப்பும் வசூல் அதிகரிக்கும் எனவே இரண்டு படங்கள் தொடர்ச்சியாக என்னுடைய தயாரிப்பில் அவர் நடித்தால் சரியாக இருக்கும் என்பது போல கூறிவிட்டாராம். அதன்பிறகும் இந்த பேச்சுவார்த்தை அப்படியே நின்று போக பிறகு இயக்குனர் தரணி ஒக்கடு படத்தை பார்த்துவிட்டு தமிழில் இந்த விஷயங்களை எல்லாம் மாற்றினால் நன்றாக் இருக்கும் என்று கூறினாராம்.

பிறகு ஏ.எம்.ரத்தினம் இந்த படத்தை நான் செய்யவில்லை என்று கூறப்போகிறேன் என்று கூறிவிட்டாராம். உடனடியாக விஜய் ஏ.எம்.ரத்தினதை நேரில் சென்று பேசினாராம். அதன்பிறகு ஏ.எம்.ரத்தினம் படத்தில் சில மாற்றங்களை செய்தால் தான் சரியாக இருக்கும் அப்படி வேண்டும் என்றால் எடுக்கலாம் என்று கூறினாராம். இதற்கு விஜய் சம்மதம் தெரிவிக்க ஏ.எம்.ரத்தினம் ஒக்கடு படத்தின் தமிழ் உரிமையை வாங்கி படத்தை தயாரித்தாராம். இந்த தகவலை ஏ.எம்.ரத்தினம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்