சண்டக்கோழி-2 வெளியாவதில் சிக்கல்….!விஷால் செய்த செயலால் தமிழகம் முழுவதும் நாளை வெளியிட மாட்டோம் …!திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி
சண்டக்கோழி-2 படத்தை தமிழகம் முழுவதும் நாளை வெளியிட மாட்டோம் என்று திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
2005-ஆம் ஆண்டு விஷால் – இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால் – லிங்குசாமி கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். இது விஷாலின் கேரியரில் 25-வது படமாம்.
முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி, அர்ஜை ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ளனராம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை தமிழகம் முழுவதும் நாளை வெளியிட மாட்டோம் என்று திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திரையரங்குகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், சண்டக்கோழி-2 படத்தை வெளியிட மாட்டோம் என அனைத்து மாவட்ட திரையரங்க உரிமையாளர்களும் கூறியுள்ளனர்.இதனால் சண்டக்கோழி-2 படத்தை தமிழகம் முழுவதும் நாளை வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.