“எனக்கு நான் தான் போட்டி”வெற்றிக்கு பின் பிரியங்கா போட்ட பதிவு!!

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றதை தொடர்ந்து பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

priyanka deshpande cwc

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை சர்ச்சையாக வெடித்த நிலையில், மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால், பிரியங்காவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

அந்த விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரியங்கா தன்னுடைய சமையலில் ஆர்வம் காட்டி குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அசத்தலான சமையல் செய்து நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் ஆகியுள்ளார்.

Read More- குக் வித் கோமாளி டைட்டில் வென்ற பிரியங்கா! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

பிரியங்கா பதிவு

மணிமேகலை பிரச்சினை காரணமாக சமூக வலைத்தளங்களில் கூட ஆக்டிவாக இல்லாமல் இருந்த பிரியங்கா பிரச்சினை பற்றி எந்த பதிவும் போடாமல் இருந்தார். இதனையடுத்து, குக் வித் கோமாளி டைட்டிலை வென்றதை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பயிற்சியாளர்களுக்கு நன்றி

தான் இந்த அளவுக்கு சமையல் செய்து கொடுத்த பயிற்சியாளர்களுக்கும் பிரியங்கா நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” எனக்காக சமையலறைகளைத் எப்போதும் திறந்து வைத்து, இரவும் பகலாக படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு நான் வருவதற்காகக் காத்திருந்த என் பயிற்சியாளர்களுக்காக, சமையலறையில் என் திறமைகளை மெருகேற்ற பொறுமையாகக் கற்றுக்கொடுத்து நான் அதைச் சரியாகச் செய்யும் வரை மீண்டும் மீண்டும் முயற்சிக்கச் செய்ய உதவிய அவர்களுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

எனக்கு போட்டி நான் தான்

என்னை பொறுத்தவரை எனக்கு போட்டி நான் மட்டும் தான். அப்போது கிச்சன் சூப்பர் ஸ்டாரின் போட்டியாளரால் செய்ய முடியாததை, இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்துகாட்டி இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. கடின உழைப்பை மட்டுமே நம்புவதற்கும் எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கும், நான் என்னை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும், என்னை விட்டுக்கொடுக்க விடாமல் எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்திற்கு நன்றி” எனவும் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி

குக் வித் கோமாளி பயணத்தில் ஊக்குவித்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும், துணை நின்றவர்களுக்கும், எனக்காக கண்ணீர் விட்டவர்களுக்கும் நன்றி. நான் தினமும் காலையில் எழுவதற்கு நீங்கள் தான் காரணம். உங்களுக்கு நன்றி” எனவும் பிரியங்கா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
shreyas iyer Shashank Singh
MKStalin
Shreyas Iyer
Virat kohli - Shreyas Iyer
manoj bharathiraja vijay