“பிரியங்கா vs மணிமேகலை பிரச்னை இப்படி தான் நடந்துச்சு”…உண்மையை உடைத்த குரேஷி!
மணிமேகலை பிரியங்கா இருவருக்கும் குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது பற்றி குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனை பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த பிரச்சனைக்கு முடிவு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் பிரியங்காவுக்கு ஆதராகவும், மாற்றோரு பக்கம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளிகள் முக்கிய கோமாளியாக இருக்கும் குரேஷி , மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை பற்றியும், குக் வித் கோமாளி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம் பற்றிம், வெளிப்படையாக உண்மையை உடைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, ஒருமுறை திவ்யா துரைசாமி நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆன போது பிரியங்கா அவரிடம் பேசினாராம். நிகழ்ச்சியில் யாராவது எலிமினேட் ஆனாலே சக போட்டியாளர்கள், எமோஷனலாக அவர்களை பற்றி பேசுவது உண்டு. அப்படிதான் பிரியங்காவும் திவ்யா துரைசாமியிடம் சிறிது நேரம் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, ஷூட்டிங் தளத்திலேயே, மணிமேகலை முகத்தில் அடித்தபடி பிரியங்கா நீங்க எப்போது பேச வேண்டாம் கடைசியில் பேசுங்கள் என கூறிவிட்டாராம்.இதனால் கடுப்பான பிரியங்கா வேகமாக சென்று கேரவனில் அமர்ந்து விட்டாராம். இந்த பிரச்சனை நடந்த காரணத்தால் இரண்டு மணி நேரம் ஷூட்டிங்கும் நடைபெறவில்லையாம்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரபலங்களும் என்ன இப்படியெல்லாம் நடக்கிறதா? என்கிற அளவுக்கு ஷாக் ஆகிவிட்டார்களாம். பிறகு அடுத்த ஷூட்டிங்குக்கு வரும்போது, பிரியங்கா இனிமேல் இதுபோன்று பேசவேண்டாம் என மணிமேகலையிடம் சாதாரணமாக சொன்னாராம். மணிமேகலை தன்னுடைய புகாரை நிகழ்ச்சியுடைய, நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கலாம்.
ஆனால், பிச்சை எடுத்து கூட பிழைப்பேன் என கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார் எனவும் குரேஷி கூறியுள்ளார். குரேஷி கூறியதன் மூலம்பிரியங்கா மீது பெரிய அளவு தப்பு இல்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதேபோல, பிரியங்காவிற்கு பிரபலங்கள் ஆதரவும் பெருகி உள்ளது. ஏற்கனவே, பாடகி பூஜா, பாவனி, ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அதற்கு அடுத்ததாக சுனிதா மற்றும் குரேஷி இருவரும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.