51 வயது டாப் நடிகருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்.! யார் தெரியுமா..?
நடிகை பிரியங்கா அருள் மோகனுக்கு தெலுங்கு திரையுலகில் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது கலக்கி வரும் இவர் தெலுங்கில் ‘கேங்க்லீடர்’ மற்றும் ‘ஸ்ரீகரம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.
பிறகு டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அந்த படம் அவருக்கு மிக்பெரியை ஹிட் கொடுத்த நிலையில், அவர் அடுத்தாக டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார் இந்த படங்களும் ஹிட் ஆனது.
இந்நிலையில், பிரியங்கா மோகனுக்கு மீண்டும் தெலுங்கில் பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம், இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யான் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Buzz:
Actress #PriyankaMohan has been roped in to play the female lead in the upcoming gangster drama #OG, starring #PawanKalyan & directed by #Sujeeth. The shooting for the film is set to begin next week in Mumbai, with both Pawan Kalyan & Priyanka Mohan joining the sets ???????????????? pic.twitter.com/YYk2kg2hTf
— KARTHIK DP (@dp_karthik) April 11, 2023
51 வயதான பவான் கல்யாணுக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடித்தால் எப்படி செட் ஆகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். மேலும், நடிகை பிரியங்கா மோகன் தற்போது தனுஷிற்கு ஜோடியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.