தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன்… “கேப்டன் மில்லர்” படத்தின் சூப்பர் அப்டேட்.!

Default Image

நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இந்த திரைப்படத்தை ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

captain miller

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தில் மாநகரம், உள்ளிட்ட படங்களில் நடித்த சுந்தீப் கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

dhanush priyanka mohan

அதன்படி, இந்த திரைப்படத்தில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன்- ஃபர்ஸ்ட் டைம் பண்ணும்போது ரொம்ப பயமா இருந்தது… அடுத்தடுத்து அதுவே பழகிடுச்சி.! ஷாலுஷம்மு சீக்ரெட்ஸ்.!

dhanush priyanka mohan DHANUSH

ஏற்கனவே பிரியங்கா சிவகார்த்திகேயன், சூர்யா, என டாப் நடிகர்களுடன் நடித்த நிலையில், தற்போது தனுஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் இருக்கிறது. இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ” இந்த மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனுஷிற்கு ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்