மெழுகு டாலு நீ..! அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிரியங்கா மோகன்.!
கன்னடத் திரைப்படமான ‘ஓந்த் கதே ஹெல்லா’ மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியங்கா அருள் மோகன், டாக்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார். பேருந்து திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைய, அடுத்ததாக டான் படத்திலும் நடித்தார். தொடர்ந்து தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரதர் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில், அவ்வபோது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதள பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் ரசிகர்களின் மனதை மயக்கும் வகையில், சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.