பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காக மணிமேகலை மீது விஜய் தொலைக்காட்சி சட்டப்பூர்வமாக வழக்கு தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறி தனக்கு காசு பணத்தை விட சுயமரியாதை தான் முக்கியம் என கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
எழுந்த ஆதரவுகள்
இந்த விவகாரத்தில் மணிமேகலை வெளியேறிய பிறகு பல பிரபலங்களும், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து பிரியங்காவை திட்டி தீர்த்து வந்தனர். அதற்கு அடுத்தாக குரேஷி, அமீர், பாவனி உள்ளிட்ட பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்கள். இப்படியே மாற்றி..மாற்றி இருவருக்கும் ஆதரவு பெருகி கொண்டு இருக்கிறது. ஆனால், பிரச்சனை முடிந்த பாடு இல்லை.
மணிமேகலை மீது வழக்கு?
இந்த சூழலில், விஜய் தொலைக்காட்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே ஒரு நிகழ்ச்சிசியில் பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள் என்றால் அதில் கலந்துகொள்ள சில ஒப்பந்த விதிமுறைகள் இருக்கும்.
அப்படி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா விஷயத்தில், மணிமேகலை விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. எனவே, இதன் காரணமாக தான். விஜய் டிவி நிர்வாகம் மணிமேகலை மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவலை பிக்பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரியப்படுத்தி இருக்கிறார்.
இந்த தகவல் விஜய் தொலைக்காட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஒரு வேலை உண்மையாக இருந்தால் இது குறித்து சேனல் தரப்பில் இருந்தே விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025