பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது தனது வரவிருக்கும் வெப் தொடரான சிட்டாடலை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருக்கிறார். நேற்று இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. பின்னர், நடிகை பிரியங்கா சோப்ரா லண்டனுக்கு புறப்பட்டார்.
பெரும்பாலும் பிரியங்கா சோப்ரா தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். இந்நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊதிய சமத்துவம் மற்றும் அது தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து பேசினார்.
மேலும், தனது வாழ்க்கையின் வெற்றிக்கு பாதுகாப்பற்ற ஆண்களை பற்றி வெளிப்படையாக பேசிய அவர், தனது வெற்றிக்கான ஆண்களைப் பற்றியும் பேசினார். கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களில் இந்தி திரையுலகம் மிகவும் மாறிவிட்டது.
வாய்ப்பு அளிப்பது தகுதி அடிப்படையிலானதாக இருக்க வேண்டும், “ஆனால் இங்கு நடிகர்களை தேர்வு செய்வதில் அரசியல் இருக்கிறது. அதற்கு பதிலாக நடிப்புக்கு வாய்ப்பு அளிக்க இயக்குநர் தான் தேர்வு செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
சிட்டாடல்:
பிரபல இயக்குனர் இரட்டையர்களான ருஸ்ஸோ பிரதர்ஸ் (அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ) இயக்கிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ( சிட்டாடல்) என்ற உளவு திரில்லர் வெப் தொடர் ஏற்கனவே, சிட்டாடல் டிரெய்லர் மூலம் உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…