மன்னிப்பு கேட்க சொன்ன பிரியங்கா…கடுப்பாகி மணிமேகலை செய்த விஷயம்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரச்சனை தொடங்கியபோது மணிமேகலையை பிரியங்கா தன்னிடம் மன்னிப்பு கேட்க கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளினி மணிமேகலை விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ள நிலையில், அவர் விலகக் காரணமாக இருந்த பிரியங்காவை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த பிரச்சனை சின்னதிரையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதராகவும், ஒரு சில பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதராகவும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த பிரச்சனை தொடங்கியதிலிருந்து முடியும் வரை நடந்த காரணம் குறித்த தகவல் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. அது என்னவென்றால், முதலில், தன்னுடைய ஆங்கரிங் வேலையைச் செய்யவிடாமல் பிரியங்கா ஆங்கரிங் செய்தபோது மணிமேகலை அவரிடம் நேரடியாகவே எதற்காக நான் பேச வேண்டியதை நீங்கள் பேசுகிறீர்கள்? என்பது போலக் கேட்டாராம்.
Read More – மணிமேகலைக்கு பயம்? பிரியங்காவுக்கு ஆதரவாக இறங்கிய பாவனி!!
மணிமேகலை இப்படிக் கேட்டவுடன் கோபமடைந்த பிரியங்கா வேகமாகச் சென்று கேரவனில் அமர்ந்துகொண்டாராம். பிறகு முக்கியமான சிலர் அவரிடம் பேசி விஷயத்தைக் கேட்டறிந்து மணிமேகலையை பிரியங்காவிடம் மன்னிப்புக்கேட்க சொன்னார்களாம். மன்னிப்பு கேட்டால் அடுத்ததாக சில நிகழ்ச்சியில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் கூறினார்களாம்.
இதனைக் கேட்டு மிகவும் கடுப்பான மணிமேகலை, மன்னிப்பு கேட்கமுடியாது என்பது போல ஒன்றும் சொல்லாமல் அடுத்த எபிசோடுக்கு வந்தாராம். இப்படிப் போய்க்கொண்டிருந்த நிலையில், மணிமேகலை மன்னிப்பு கேட்கவில்லை, என்பதால் பிரியங்காவும் தொடர்ச்சியாக நான் தான் பெரிய தொகுப்பாளர் என்பது போல மணிமேகலையை ஆங்கரிங் செய்யவிடாமல் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சி நன்றாகச் செல்லவேண்டும் என ரொம்ப நாட்களாகப் பொறுமையாக இருந்த மணிமேகலை ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்து நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தாராம். இந்த தகவலைப் பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தப்பேட்டில், தனக்கு திரைத்துறை வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல் எனக் கூறியுள்ளார்.