குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க !

priyamani

நடிகை பிரியாமணி தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். குறிப்பாக ஹிந்தியில் கூட  கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி இருந்த ஜவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

read more- அந்த விஷயத்துக்கு அடம் பிடிக்கும் அதிதி ஷங்கர்! உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை பிரியா மணி பாமகலாபம் 2 என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை  தொடர்ந்து ஆர்டிகல் 370 என்ற ஹிந்தி திரைப்படத்திலும் பிரியா மணி  நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று வருகிறது.

படத்தில் பிரியாமணி  நடித்த கதாபாத்திரமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்த குஷியில் நடிகை பிரியா மணி  கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது குடும்பத்துடன் சென்று “Mercedes-Benz GLC” என்ற வகையை சேர்ந்த சொகுசு காரை நடிகை பிரியாமணி வாங்கி இருக்கிறார்.

read more- சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு…ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய ஏ.ஆர்.ரகுமான்.!

பிரியாமணி வாங்கி இருக்கும் இந்த காரின் விலை 75 லட்சம் வரை இருக்குமாம். இப்போது படங்களில் நடிக்க இளம் நடிகைகள் கூட கோடி கணக்கில் சம்பளம் வாங்கி கோடியில் கார் வாங்கிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், பிரியாமணி சம்பளத்தை உயர்த்தாமல் இன்னுமே 80 லட்சம் அளவில் தான் சம்பளம் வாங்கி வருகிறாராம்.  அந்த சம்பளத்திற்கு ஏற்றது போல அவர் கார் வாங்கி இருக்கிறார்.

read more- நீ தான்பா சரியான ஆளு! பயோபிக் எடுக்க ‘ஆக்சன்’ இயக்குனரை தேர்வு செய்த இளையராஜா?

கார் வாங்கிய பிறகு ஷோ ரூமில் வைத்து கேக் வேட்டியும் இந்த அசத்தலான தருணத்தை கொண்டாடியும் இருக்கிறார். புதிய கார் வாங்கிய பிரியாமணிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும். ஆர்டிகல் 370  படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரியாமணி மைதான் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தமிழில் கலக்கி வந்த இவர் தற்போது ஹிந்தியில் கலக்கி கொண்டு இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்