சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் அடிக்கடி தனக்கு தோன்றுவது மற்றும் தன்னிடம் கேட்கும் எந்த மாதிரி கேள்விகளுக்கும் வெளிப்படையாகவே பதில் அளித்துவிடுவார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனது காதலுருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
இது குறித்து பேசிய பிரியா பவானி சங்கர்”நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தேன். அப்போதுதான் எனக்கும் எனது காதலருக்கும் காதல் தொடங்கியது. ஹாஸ்டலில் தங்கி இருந்த காலகட்டத்தில் அங்கு இருப்பவர்களுக்கு வார இறுதியில் இரண்டு மணி நேரம் மட்டுமே வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு.
எனவே, ஒருநாள் நானும் என் காதலரும் வெளியே செல்வதற்காக கிளம்பி இருந்தோம். அப்போது ஹாஸ்டலின் வார்டன் அவரைப் பார்த்து ஹெல்மெட்டை கழட்டுங்கள் என கூறினார். உடனடியாக அவரும் கழட்டிய உடன் என்னை பார்த்து வார்டன் என்னமா பையன் கூட போகிறாய்..? என கேட்டார். அப்போது எனக்கு அந்த சூழ்நிலையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
பிறகு நான் இது என்னுடைய அவுட்டிங் டைம் நான் யார் கூட வேணாலும் போவேன் எங்க வேணாலும் போவேன். என்ன இப்போ பிரின்ஸ்பல் கிட்ட சொல்வீர்களா..? என்னுடைய வீட்டு நம்பர் தருகிறேன் என்னுடைய பெற்றோர்களிடம் சொல்கிறீர்காளா..? என கேட்டேன். அதற்கு வார்டன் அதிர்ந்துவிட்டார்” என பிரியா பவானி சங்கர் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலரின் புகைப்படத்தை வெளியீட்டு தனது காதலர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் கடைசியாக ரூத்ரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 , ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…