காதலனுடன் மாட்டிக்கொண்ட பிரியா பவானி சங்கர்.! ஒரு பதிலால் வார்டனை அதிர வைத்த அந்த சம்பவம்.!

priya bhavani shankar

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமாகி தற்போது  வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் அடிக்கடி தனக்கு தோன்றுவது மற்றும் தன்னிடம் கேட்கும் எந்த மாதிரி கேள்விகளுக்கும் வெளிப்படையாகவே பதில் அளித்துவிடுவார்.  அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் தான்  கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தனது காதலுருடன் மாட்டிக்கொண்ட  சம்பவம்  குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

PriyaBhavaniShankar
PriyaBhavaniShankar [Image source : twitter/ @ijnzokm]

இது குறித்து பேசிய பிரியா பவானி சங்கர்”நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தேன். அப்போதுதான் எனக்கும் எனது காதலருக்கும்  காதல் தொடங்கியது. ஹாஸ்டலில் தங்கி இருந்த காலகட்டத்தில் அங்கு இருப்பவர்களுக்கு  வார இறுதியில் இரண்டு மணி நேரம் மட்டுமே வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு.

PriyaBhavaniShankar
PriyaBhavaniShankar [Image source : twitter/ @pbs_fan_boy]

எனவே, ஒருநாள் நானும் என் காதலரும் வெளியே செல்வதற்காக கிளம்பி இருந்தோம். அப்போது ஹாஸ்டலின் வார்டன்  அவரைப் பார்த்து ஹெல்மெட்டை கழட்டுங்கள் என கூறினார். உடனடியாக அவரும் கழட்டிய உடன் என்னை பார்த்து வார்டன்  என்னமா பையன் கூட போகிறாய்..? என கேட்டார். அப்போது எனக்கு அந்த சூழ்நிலையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

PriyaBhavaniShankar
PriyaBhavaniShankar [Image source : twitter/ @pbs_fan_boy]

பிறகு நான் இது என்னுடைய அவுட்டிங் டைம் நான் யார் கூட வேணாலும் போவேன் எங்க வேணாலும் போவேன். என்ன இப்போ பிரின்ஸ்பல் கிட்ட சொல்வீர்களா..? என்னுடைய வீட்டு நம்பர் தருகிறேன் என்னுடைய பெற்றோர்களிடம் சொல்கிறீர்காளா..? என கேட்டேன். அதற்கு வார்டன் அதிர்ந்துவிட்டார்” என பிரியா பவானி சங்கர் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

Priya Bhavani Shankar lover
Priya Bhavani Shankar lover [Image source : file image ]

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலரின் புகைப்படத்தை வெளியீட்டு தனது காதலர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PriyaBhavaniShankar
PriyaBhavaniShankar [Image source : twitter/ @ijnzokm]

மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் கடைசியாக ரூத்ரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 , ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்