சிம்ரன் கிட்ட அது இல்லை இது இல்லன்னு சொல்லவே முடியாது! இளம் நடிகை புகழாரம்!

Published by
பால முருகன்

Simran : நடிகை சிம்ரன் கிட்ட அது இல்லை இது இல்லை என்று சொல்ல முடியாது அவர் ஒரு சிறந்த நடிகர் என பிரியா பவானி சங்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.

சினிமாத்துறையில் இருக்கும் இளம் நடிகைகள் பலருக்கும் சிம்ரன் தான் ரோல் மாடல் என்றே கூறலாம். சிம்ரனை பார்த்து பலரும் சினிமாவுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் சிம்ரன் போல் இருக்கும் நடிகை யார் என்று கேட்டால்  நம்மளுடைய நினைவுக்கு வருவது நடிகை பிரியா பவானி சங்கர் தான்.

குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா கூட பிரியா பவானி சங்கர் சிம்ரன் போல இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியா பவானி சங்கர்  தனக்கு பிடித்த நடிகை சிம்ரன் தான் என கூறியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்  ” எனக்கு சிம்ரன் என்றால் ரொம்பவே பிடித்த ஹீரோயின்.

சிம்ரன் கிட்ட அது இல்லை இது இல்லை என்று எதுவும் சொல்ல முடியாது. அவருக்கு கவர்ச்சியாகவும் நடிக்க தெரியும், கதாபாத்திரத்திற்கு ஏற்படியும் நடிக்க தெரியும். அதைப்போல நடனம் ஆடுவதில் சிம்ரனை யாருமே குறை சொல்லவே முடியாது எப்படியாப்பட்ட பாடல்களாக இருந்தாலும் சிம்ரன் அழகாக நடனம் ஆடுவார். ஒரு நடிகை பீக்கில் இருக்கும்போது ஒரே மாதிரியான பெரிய கதாபாத்திரங்களை மட்டும் தான் தேர்வு செய்து நடிப்பார்கள்.

ஆனால், சிம்ரன் அப்படி இல்லை அவர் பீக்கில் இருந்த நேரத்தில் கூட வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். குறிப்பாக வில்லியாகவும் கூட ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். அப்படியெல்லாம் பீக்கில் இருந்த நடிகைகள் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கவே ஒரு தைரியம் வேண்டும். சிம்ரன் அதனை செய்தார்.  நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சிம்ரன் படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கிறேன்” எனவும் நடிகை பிரியா பவானி சங்கர்  தெரிவித்துள்ளார்.

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

7 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

9 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

9 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

10 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

12 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

13 hours ago