பிரியா வாரியர் செய்த இந்த செயலால் அவர் மீது வழக்குப்பதிவு!அதிர்ச்சியில் ரசிகர்கள் ………
தனது கண்ணசைவால் இளைஞர்களின் இதயத்தை கலக்கி வரும் மலையாள நடிகை ப்ரியா வாரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு அடார் லவ் என்ற படத்தின் மாணிக்க மலரே பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை பிரியா வாரியார் புருவ அசைவாலேயே இளம் இதயங்களைத் துள்ள வைத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே ப்ரியா வாரியர் மீதும், அந்த பாடலை உருவாக்கிய குழுவினர் மீதும் ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இஸ்லாமியா மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காட்சியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை ப்ரியா வாரியர் நடித்துள்ள படத்தின் புதிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இன்ஸ்டகிராமில் அவரை, ஒரே நாளில் 6 லட்சம் பேர் பின் தொடர்த்துள்ளனர். மேலும், இணையத்தில் தேடப்படும் பிரபலங்களில் சன்னிலியோனை ஓரங்கட்டி பிரியா வாரியர் முன்னிலை பெற்றுள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.