ஜூனியர் ஆர்ட்டிஸ்டிடம் அத்துமீறய பிருத்விராஜ் பட உதவி இயக்குனர்.. ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு.!
திருவனந்தபுரம் : பிருத்விராஜ் இயக்கிய ‘ப்ரோ டாடி’ படப்பிடிப்பில் ஜூனியர் பெண் ஆர்ட்டிஸ்டிடம், உதவி இயக்குனர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
மலையாள திரையுலகில் நிகழ்ந்துவரும் ‘MeToo’ 2.0 வெர்ஷன் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு, மலையாள நடிகர்கள் மீது எழுந்த பாலியல் புகார்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக, இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கிய ‘ப்ரோ டாடி’ படத்தின் உதவி இயக்குனர் மன்சூர் ரஷீத், தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை படம் பிடித்ததாக ஹைதராபாத் போலீசில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தும் கைது செய்யவில்லை. மலையாளத் திரையுலகில் பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து விசாரிக்க கேரள அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஹைதராபாத் போலீஸார் அந்த புகாரை ஒப்படைப்பார்கள் என ஒன்மனோரமா (onmanorama) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அன்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து விவரித்த அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ” திருமணக் காட்சியில் நடிப்பதற்காக கேரள நடிகர் சங்கம் மூலம் படத்தின் செட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மன்சூர் ரஷீத் வரும் காட்சிகளில் அவருக்கு வாய்ப்பு அளித்து, படக்குழு தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்க வைத்ததாகவும் கூறிஉள்ளார். பின்னர், அவரது அறைக்கு சென்ற அவர், போதை பொருள் கொடுத்து மயக்கமடைய செய்து வன்கொடுமை செய்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நிர்வாணமாக படமும் பிடித்துள்ளார். மறுநாள் காலை, மன்சூர் அந்த நிர்வாண புகைப்படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இவ்வாறு, அந்த புகைப்படத்தை காமித்து பலமுறை மிரட்டியதாகவும், ஒரு கட்டத்தில் முடியாததால் ஹைதராபாத் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய கொல்லம் கடக்கலில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் வந்தனர், ஆனால் அவர் தப்பியோடியுள்ளார்.
இவ்வாறு பலமுறை போலீசார் கைது செய்ய முயற்சி செய்தும் அவர் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், மன்சூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த பிறகும் மலையாள திரையுலகின் பல முக்கிய பிரபலங்களின் படங்களில் பணிபுரிந்து வருவதாக கூறிய அந்த ஜூனியர் பெண் ஆர்ட்டிஸ்ட் , மன்சூருக்கு எதிரான தனது புகாரை முதலமைச்சரும் கலாச்சார விவகார அமைச்சரும் புறக்கணித்ததாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
மன்சூர் ரஷீத் அய்யப்பனும் கோஷியும், லூசிஃபர், எம்புரான் போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும் பண்ணியாற்றியது குறிப்பிடத்தக்கது.