கேரளாவில் மற்றொரு சோகம்…நிறை மாத கர்ப்பிணி நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு!

Pregnant actress DIE

மலையாள சின்னத்திரை நடிகை மற்றும் மருத்துவரான பிரியா (35) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த பிரியாவின் கருவில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் மீட்டு தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொழில் ரீதியாக மருத்துவராக இருந்த பிரியா, திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தாய் மற்றும் மகளுடன் கேரளாவின் பூஜாப்புராவில் வசித்து வந்த பிரியாவுக்கு பெங்களூருவை சேர்ந்த சரவணன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்காக ஓய்வு முடித்த பின் சின்னத்திரைக்கு மீண்டும் நடிக்க சென்றார்.

பிரியா உயிரிழந்த செய்தியை நடிகர் கிஷோர் சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகையின் புகைபடத்தைப் பகிர்ந்த நடிகர் கிஷோர் சத்யா, எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த பிரியா, நேற்று வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால், திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக குறிப்பிட்ட அவர், அவரது குழந்தை ஐசியூவில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ரெஞ்சுஷா மேனன் தனது வாடகை வீட்டில் தூக்கில். இவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில், காரணத்தை கண்டறிய போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நடிகை ரெஞ்சுஷா மேனனின் மறைவால் சோகத்தில் மூழ்கி இருந்த மலையாள சினமா பிரபலங்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தியாக, அவர் உயிரிழந்து ஒரு நாள் கழித்து இந்த செய்தி வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்