pray for srilanka என போட மனம் வரவில்லை இலங்கையை குறித்து நடிகர் சதிஷ் வருத்தம்
இலங்கையில் கடந்த ஞாயிற்று கிழமை 8 இடங்களில் மிக பெரிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.அந்த சம்பவத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் காமெடி நடிகர் சதிஷ்,அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “இலங்கையில் இருக்கும் தமிழ் சொந்தம் ஒருவரிடம் பேசினேன். அவர் குரலில் இன்னும் படபடப்பு அடங்கவில்லை. இதற்கு காரணமானவர்களை எந்த மதக் கடவுளும் மன்னிக்காது. #prayforsrilanka னு போட மனது வரவில்லை. Pray பண்ணும் போது தானே வெடிக்க வைத்தார்கள் பாவிகள் ” என்று ஒரு பதிவை வெளியிட்டு அவரது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.