நேசமணி பாணியில் ட்ரெண்டாகும் ஜானிக்காக வேண்டிக்கொள்ளுங்கள்! நெட்டிசன்களிடம் மொக்கை வாங்கிய முன்னாள் பாகிஸ்தான் தூதர்! இதன் உண்மை பின்னணிஎன்ன?
ஜானி சின்ஸ் என்பவர் ஆபாச திரைப்படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமானவர் இவர். சமூக வலைத்தளங்களில் சிலர் சில வதந்தியான செய்திகளை பரப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதையும் உண்மையென நம்புவதற்கும் சிலர் உள்ளனர். அந்த வலையில் தான் தற்போது பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் சிக்கியுள்ளார்.
அமர் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஜானி சின்ஸ் மருத்துவமனையில், உயிருக்கு போராடியபடி பெண் மருத்துவர் ஒருவரிடம் காப்பாற்றும்படி கதறுவது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பவர் காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்தநாகை சேர்ந்த யூசுப் என்பவர் ஆவார். ஒரு கலவரத்தில் கல்லால் அடித்தததால் அவரது பார்வை போய்விட்டதாக கூறி, இவருக்காக குரல் கொடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, பாகிஸ்தானின் முன்னாள் அப்துல் பாசித், சற்றும் யோசிக்காமல் இந்தியா மீதுள்ள வெறுப்பில் அதனை ரீட்வீட் செய்த்துள்ளார். இதனை கண்ட இணையதளவாசிகள் அதனை ஸ்கிரீன் சாட் எடுத்து அதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்துள்ளனர். அது உலக அளவில் ட்ரெண்டாகியுள்ளது.
இதுகுறித்து சில ஆங்கில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, ஆபாச பட தயாரிப்பு நிறுவனமொன்றில் ட்வீட்டர் பக்கத்தில், ‘ஜானிக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். இது உலகம் முழுவதும் ட்ரெண்டான நிலையில், அதற்க்கு ஜானி சின்ஸ் தனது ட்வீட்டரில், ‘ தங்கள் குரல் கொடுத்தமைக்கு நன்றி. என் பார்வை நன்றாகவே இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவும் பலரின் கேலிகிண்டலுக்கு உள்ளாக, இதன் உண்மை தன்மை அவருக்கு தெரிய வந்த, அப்துல் பாசித் அந்த பதிவினை நீக்கி உள்ளார்.