நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற உடை அணிந்திருந்தார். எனவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிலர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
பிறகு இறுதியாக அணைத்து தடைகளையும் தாண்டி படம் ஒரு வழியாக வெளியாகி வசூலில் 800 கோடிகளை கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதனையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ” பதான் படத்தின் சர்ச்சை குறித்தும் தி காஷ்மீர் படத்தை பற்றியும் பேசியுள்ளார்.
இது குறித்து கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ் ” ஷாருக்கானின் “பதான்” திரைப்படத்தை சிலர் தடை செய்ய நினைத்தார்கள். ஆனால், படம் வெளியாகி உலகம் முழுவதும் 700 கோடிகளை தாண்டி வசூலாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தடை செய்ய நினைத்தவர்கள் “குரைப்பவர்கள்” தான் “கடிக்கமாட்டார்கள்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் “காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தை இயக்கிய அதன் இயக்குநர், எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். அந்த படத்திற்காக அவருக்கு ஆஸ்கர் அல்ல… பாஸ்கர் கூட கிடைக்காது” என விமர்சித்து பேசியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…