அஜித், சூர்யா பட வசூலை தட்டி தூக்கிய பிரதீப்.! மொழிகள் கடந்து வெறியாட்டம் ஆடும் ‘லவ் டுடே’.!

Default Image

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

LoveToday Movie Poster
LoveToday Movie Poster [Image Source: Twitter ]

படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – இசையால் மனதை உருக வைத்த இசையமைப்பாளர்களின் டாப் லிஸ்ட்… இது வேற மாதிரியான பிளே லிஸ்ட்…

LoveTodayTelugu
LoveTodayTelugu [Image Source: Twitter ]

தமிழில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தெலுங்கு உரிமையை பெற்று வெளியிட்டது. அதன்படி நேற்று, படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகி அங்கேயும் நல்ல வரவவேற்பை பெற்று வருகிறது.

LoveTodayTelugu
LoveTodayTelugu [Image Source: Twitter ]

அதன்படி,  தெலுங்கில் டப் செய்யப்பட்ட வெளியான இந்த படம் “லவ் டுடே” திரைப்படம் வெளியான முதல் நாள் வசூலில் இதற்கு முன்பு வெளியான அஜித்தின் வலிமை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களின் வசூலை முந்தியுள்ளது. வலிமை படம் ரூ. 1.7 கோடியும், எதற்கும் துணிந்தவன் ரூ. 1.8 கோடியும்  வசூல் செய்திருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்