தெகிடி, மேயாத மான் பட பிரபலம் பிரதீப் விஜயன் உயிரிழப்பு!

Pradeep K. Vijayan RIP

பிரதீப் விஜயன் : தமிழ் சினிமாவில் தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரதீப் விஜயன் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. 2 நாட்களாக இவரை காணவில்லை தொலைபேசியை தொடர்புகொண்டும் அதற்கு பதில் அளிக்கவில்லை  என இவருடைய நெருங்கிய நண்பர்கள் காவல்துறையில் தகவலை தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியும் வந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் இருக்கும் பிரபாகர் என்பவர் பிரதீப் விஜயன் வீட்டின் உள் பகுதி லாக் ஆகி இருப்பதை கண்டுபிடித்து சந்தேகப்பட்டு காவல்துறைக்கு தகவலை கொடுத்தார். பின், விரைந்து சென்ற நீலாங்கரை காவல்துறையினர் இன்று அவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது கழிவறையில் பிரதீப் விஜயனை இறந்த நிலையில் சடலமாக மீட்டனர். தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை செய்தும் வருகிறார்கள்.

சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு தலையில் அடிபட்டு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், மறைந்த நடிகர் பிரதீப் விஜயன் வங்கி மேலாளர், ஐ.டி. நிறுவன மேலாளர் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்