கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன், அனுபமா இணைந்து நடித்துள்ள 'ட்ராகன்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘ட்ராகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு லோஹர், VJ சித்து, ஹர்ஷத், சினேகா, பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர், ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரதீப்பின் கவர்ச்சிகரமான நடிப்பும் அனுபமாவின் மகிழ்ச்சிகரமான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. மேலும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள துடிப்பான காட்சிகள், நகைச்சுவையான வசனங்கள் மற்றும் வசீகரிக்கும் காதல் தருணங்கள் என அனைத்தும் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளன.
மொத்தத்தில் இந்த படம் ஒரு அதிரடி, கற்பனை மற்றும் நகைச்சுவை ஆகியவற்றைக் கலந்த ஒரு வித்தியாசமான காதல் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.ஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.