பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேறியது ரசிகர்களின் மனதில் தீராத ஒரு சோக கதையாக இருந்து வருகிறது. அவர் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காமல் தரைகுறைவாக பேசி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு பிக் பாஸ் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியது.
அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர். பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள் என்றே சொல்லவேண்டும். பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவதற்கு முன்பு அவருடைய தரப்பு நியாத்தை கமல் கேட்காததால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், ரட்சகன் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரவீன் காந்தி அண்மையில் ஒரு பேட்டியில் பிக் பாஸிலிருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வருகிறது. அந்த படத்தை நான் எந்த மன நிலையில் பார்க்க முடியும்? அவர் என்ன பேசினாலும் எனக்கு காமெடியாக இருக்கும்.
பிக் பாஸ் பிரதீப்பின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் பிரபல ஓடிடி நிறுவனம்!
கண்டிப்பாக இந்தியன் 2 படம் வெளியான பிறகு திரையரங்குகளுக்குள் படம் பார்ப்பவர்கள் கமல்ஹாசன் எதாவது சீரியசான வசனம் பேசும்போது பிரதீப் ஆண்டனியை எதற்கு வெளியே அனுப்புனீர்கள்? என்ற கேள்வியை கண்டிப்பாக கேட்பார்கள். எனவே. இதைப்பற்றி எல்லாம் கமல்ஹாசன் சார் யோசித்திருக்கவேண்டும். இளைஞர்கள் புரிந்து கொள்வார்கள் என்று எல்லாம் விட கூடாது.
எல்லாரும் இளம் வயதில் அப்படி தான் இருந்திருப்பார்கள் எனவே நாம் தான் அதனை சொல்லி கொடுத்து அவர்களை திருதிக்கொடுக்கவேண்டும். அவர்கள் தப்பு செய்தால் கூட அப்டியே விட்டுவிட கூடாது நல்ல விஷயங்களை சொல்லி கொடுக்கவேண்டும். என்னை பொறுத்தவரை பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பியது சரியான முடிவாக தெரியவில்லை” எனவும் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…