பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரதீப் என்று கூறலாம். தமிழ் சினிமாவில் அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி. ஒவ்வொரு சீசன்களிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் மக்களுடைய பேவரைட் போட்டியாளர்களாக இருப்பார்கள்.
அப்படி தான் இந்த 7-வது சீசனில் பிரதீப் ஆண்டனி விளையாடும் விதம் தங்களுக்கு மிகவும் பிடித்து போக மக்கள் அனைவரும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், நன்றாக விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றப்பட்டார்.
பிரதீப் ஆண்டனி தன்னுடைய சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதம் மற்றும் தொடர்ச்சியாக சில தேவையில்லாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வந்த காரணத்தால் அவர் மீது போட்டியாளர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள். இதற்கு கமல்ஹாசனும், பிரதீப்புக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல், திடீரென நிகழ்ச்சியிலிருந்து அவரை வெளியேற்றியதற்காக நெட்டிசன்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளை பெற்றுக்கொண்டார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்புக்கு ஆறுதல் சொன்ன கவின்-சினேகன்!
இதனையடுத்து, அவருக்கு வைல்ட் கார்டு மூலம் ‘பிக் பாஸ் தமிழ் 7’-க்குள் நுழைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக இரண்டு போட்டியாளர்களுக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் அந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்று சொல்லப்படுகிறது.
தற்போது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை விட பிரதீப் ஆண்டனிக்கு ஒரு பெரிய வாய்ப்புளிக்க விஜய் டிவி முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்படியாவது ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று பிரதீப் ஆண்டனி பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
எங்க தலைக்கு தில்லா பார்த்தியா!! நூதன முறையில் கமலுக்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் பிரதீப்…
இந்த செய்தியை அறிந்த விஜய் டிவியில் பங்குதாரரான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், பிரதீப்புக்கு வெப் சீரிஸ் இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், தற்போது பிரதீப் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் கமல் தீர விசாரிக்காமல் வெளியேற்றத்திற்கு நெட்டிசன்கள் எதிர்மறை கருத்துக்களை தெரிவிக்கின்றனர். மறுபக்கம், அவரது நீண்ட நாள் கனவையும் லட்சியத்தையும் நிறைவேற்ற அவருக்கு ஒரு அறிய வாய்ப்பை அளித்துள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…