பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளரால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான வனிதாவை கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தன்னை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாகவும், காயமடைந்த கண்னுக்கு அருகே வீங்கிய முகத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில், சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனிக்கு எதிராக தனது மகள் ஜோவிகாவும் மற்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்ததாக அவர் கூறினார். மேலும், மர்ம நபர் தாக்குதல் குறித்து வனிதா காரும் அளித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், சனிக்கிழமை இரவு பிக்பாஸ் 7 ஷோவை முடித்துவிட்டு, உணவை சாப்பிட்டுவிட்டு, என் சகோதரி சௌமியாஸ் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த எனது காரில் இறங்கினேன். எங்கிருந்தோ வந்த மர்மநபர் ஒருவர், ரெட் கார்ட் ஆ கொடுக்கிங்க…என்று சொல்லிவிட்டு தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், பிக் பாஸ் தமிழ் 7-ல் இருந்து சக பெண் போட்டியாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, ரெட் கார்ட் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. இதனை தொடர்ந்து, பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதெற்கு ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். அது மட்டும் இல்லாமல், அவர் வெளியேறியதை தொடர்ந்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கண்டங்களையும் தெரிவித்தனர்.
பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவதற்கு முன்பு அவருடைய தரப்பு நியாத்தை கமல் கேட்காததால் அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், வனிதா மகள் ஜோவிகா வீட்க்குள் இருப்பதால், நிகழ்ச்சி பார்த்து விட்டு ரிவ்யூ கொடுத்து வருகிறார். அந்த வகையில், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி என்பது போல் விமர்சித்திருந்தார்.
பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? குட்டி பத்மினியோடு இருக்கும் அந்த நடிகை…
இதனையடுத்து, வினிதா தாக்கப்பட்டதை அறிந்து பிரதீப் ஆண்டனி, வருத்தம் தெரிவித்து நம்வம்பர் 5 ஆம் தேதி நடந்த வாட்ஸ் அப் உரையாடலை பகிர்ந்து இருந்தார். பின்னர், அந்த பதிவை டெலிட்டு செய்துவிட்டார்.
தனது பதிவில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அல்லது யாருக்கும் எதிராக நான் இல்லை. நான் அவர்களுடன் இப்படித்தான் பேசுகிறேன். வினிதா உங்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் உங்களுக்காக வருந்துகிறேன். ஓய்வு எடுங்கள். ஜோவிகா புத்திசாலி, அவளால் அதை வெல்ல முடியும், அவளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…