யானைக்கு பேய் பிடித்தால் என்னவாகும்.? நம்ம நடன புயலின் அடுத்த அப்டேட்.!
பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கிறார். அதில், யானைக்கு பேய் பிடித்தது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
நம்ம கோலிவுட் இயக்குனர்களிடம் இருந்து பேயை காப்பாற்ற வேண்டும் என பேய் முன்னேற்ற சங்கத்திடம் இருந்து கடிதமே வந்துவிடும் அளவிற்கு ஒரு காலத்தில் பேய் படங்கள் குவிந்து வந்தன. தற்போது வரை சுந்தர்.சி மற்றும் லாரன்ஸை தவிர்த்து மற்ற இயக்குனர்கள் அந்த அப்பாவி பேய்யை விட்டுவிட்டனர்.
அந்த பேய் கதையை தற்போது இன்னோர் இயக்குனர் கையில் எடுத்துள்ளார். பாடலாசிரியரும் இயக்குனருமான பா.விஜய் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்க உள்ளார்.
இந்த படம் பேய் படமாக உருவாக உள்ளது. இதுவரை, மனிதர்கள், நாய், ஈ, வாகனம் என பேய் பிடித்திருந்த காலம் போய், தற்போது, ஒரு யானை மீது பேய் பிடித்தது போல இப்பட கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரபு தேவா நடிப்பில் அடுத்ததாக பகீரா, பொன் மாணிக்கவேல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.