vijay and son [FILE IMAGE]
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தில் ‘நான் அடிச்சா’ பாடலில் தனது தந்தையுடன் திரையில் தோன்றினார். அந்த பாடலில் இடம்பிடித்த ஜேசன் சஞ்சய்க்கு தற்போது 23 வயதாகி, இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார்.
இயக்கம் மீதும் மிகவும் ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் பற்றி படித்து வந்தார். பிறகு படித்து முடித்த கையேடு ஜேசன் சஞ்சய் “trigger” எனும் சிறிய குறும்படம் ஒன்றையும் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பற்றி நெகிழ்ச்சியாக பேசினார். பிரபல செய்தி ஊடகமான பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசிய பிரபுதேவா, ஜேசன் சஞ்சய்யின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவதாக கூறினார்.
விஜய்யை ஒரு படத்தில் இயக்கியிருக்கிறேன். தற்போது அவரது மகன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று பாருங்கள். ஜேசன் சஞ்சயின் வளர்ச்சியைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இவ்வளவு ஹாப்பியாக இருந்தால், அவருடைய அப்பா விஜய் எவ்வளவு ஹாப்பியாக இருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று குறிப்பிட்டார்.
Jason Sanjay : சபாஷ் சரியான தேர்வு ! ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ இவர் தான்!
அண்மையில், விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோருக்கு இடையே விரிசல் ஏற்பட்டதாகவும், புதிய படம் இயக்குவது குறித்து விஜய் எதுவுமே பேசவில்லை என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியதும் ரசிகர்கள், பிரபு தேவா சொல்வது போல், அவர்கள் ஹாப்பியாக தான் இருகாங்க, கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, பிரபுதேவா மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் போக்கிரி திரைப்படம் உருவானது. பிரபுதேவா இயக்கத்தில் 2007 ஆண்டு வெளிவந்த இந்த ஆக்சன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் பட பூஜை! மகனுக்காக கலந்துகொள்ளாத விஜய்?
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்ச லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க, தமிழ் சினிமாவின் சில இளம் நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மானின் மகன் ஏஆர் அமீன் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…