நடிகர் ரஜினியின் தன்னுடைய படங்களில் நடிக்கும் ஸ்டைலுக்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒரு காட்சி சாதாரணமாக இருந்தாலும் அதனை ஸ்டைலாக மாற்றி தனக்கான ஒரு பாணியை அமைத்து அனைவரையும் ரஜினிகாந்த் வியக்க வைத்து விடுவார். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பின் போது நடன காட்சிகள் வந்தாலே நடுங்கி விடுவாராம்.
இந்த தகவலை பிரபல நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் நடன காட்சிகள் என்றால் மட்டும் சற்று பதட்டம் அடைந்து விடுவாராம். படபிடிப்பு சமயங்களில் நடன காட்சி வந்தது என்றால் அந்த மாஸ்டர்களிடம் நடன காட்சியா என்பது போல அதிர்ச்சி அடைந்து விடுவாராம்.
அறிய வாய்ப்பு! சினிமாவில் நடிக்க ஆர்வமா? சூர்யா நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
படப்பிடிப்பில் மற்ற காட்சிகளில் எல்லாம் அசத்தலாக நடித்து கெத்தாக நடிப்பாராம். நடன காட்சி என்றால் ரோபோ போல பயந்துவிடுவாராம். பாடல் காட்சி எடுக்கிறோம் என்றவுடன் காலில் 20-பது கயிறுகளை கட்டிவிட்டது போல ஆகிவிடுவாராம். பிறகு படக்குழுவினர் உங்களுக்கு தெரிந்த ஸ்டெப்களை போடுங்கள் என கூறுவார்களாம்.
அதற்கு ரஜினி நீங்கள் சொல்வது சரி தான் இருந்தாலும் நடனம் என்றாலே சற்று பயமாக இருக்கிறது என்று கூறுவாராம். எனவே எப்போதும் ரஜினிகாந்திற்கு நடனம் மீது பெரிய மரியாதையும் பயம் கலந்த ஒரு மரியாதையும் இருப்பதாகவும் பிரபுதேவா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பிரபுதேவா ரஜினி எப்போதுமே நல்ல மனிதர்.
நாம் வெளியே இருந்து பார்க்கும் போது ரஜினி சார் பெரிய ஹீரோ என்பது போல இருக்கமாட்டார். அவருடன் எந்த அளவிற்கு நெருங்கி பழகிக்கிறோமோ அதே அளவிற்கு அவர் அன்பாக பார்த்துக்கொள்வார். அந்த அளவிற்கு ஒரு நல்ல மனிதர்” என ராகவ லாரன்ஸ் ரஜினியை புகழ்ந்து பேசியுள்ளார்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …