சென்னை : கல்கி படத்தில் 8 கோடி செலவில் உருவான ‘புஜ்ஜி’ எனும் நவீன காரை சென்னை மக்கள் ஆச்சர்யத்தோடு பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தெலுங்கு நடிகர் பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படமும் ஒன்று. படத்தில் பிரபாஸை தவிர, கமல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது, புரமோஷன் பணிகளைத் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம், படத்திற்காக ரூ.8 கோடி மதிப்பில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட “புஜ்ஜி” என பெயரிடப்பட்டிருக்கும் பிரம்மாண்ட காரை மக்கள் பார்வைக்காக மஹிந்திரா கோல்டு சிட்டியில் வைத்துள்ளது.
இவ்வளவு பெரிய காரை பார்வையாளர்கள் பார்ப்பது இதுவே முதல் முறை என்பதால், ‘புஜ்ஜி’ காரின் அழகும் அதன் குறிப்பிடத்தக்க அம்சங்களும் அதைப் பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சொல்லப்போனால், இது ஒரு ரோட்டில் ஓட்ட கூடிய சிறிய விமானத்தை போல தோற்றமளிக்கிறது.
படத்தில் இடம்பெற்றுள்ள இந்த புஜ்ஜி கார் முதலில் AI மூலம் எடிட் செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால், இப்போ சென்னை வீதியில் உலா வந்ததை தொடர்ந்து உண்மைலேயே இது ஒரு அற்புதமான படைப்பாக பார்க்கப்படுகிறது.
6000 கிலோ எடை கொண்ட இந்த பிரம்மாண்ட கார், 6075 மிமீ நீளமும், 2186 மிமீ உயரம் மற்றும் 3380 மிமீ அகலமும் கொண்டுள்ளது. இந்த கார் 47kw பேட்டரி உதவியுடன் இயக்கப்படுகிறது. இந்த காரை உள்நாட்டு உற்பத்தியாளர்களான மகிந்திரா மற்றும் ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…