பிரபாஸின் ‘கல்கி 2829 ஏடி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Kalki 2898 AD

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கல்கி 2898-AD’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது, அதனை வைத்து பார்க்கையில், ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் கதைக்களம் அமைந்திருப்பது போல் தெரிகிறது.

நடிகர் பிரபாஸ் இதற்கு முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்தார். இப்பொது, கல்கி 2898-AD படத்தின் மூலம் கல்கியாக அவதாரம் எடுத்துக்கிறார். இப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் இதுவரை இல்லாத இந்தியத் திரைப்படமாக வெளியாக காத்திருக்கிறது.

இந்நிலையில், பண்டிகை காலங்களில் ஏற்கனவே பல படங்கள் வெளியாக காத்திருக்கும் நிலையில், சம்மர் கொண்டாட்டத்தை படக்குழு குறிவைத்துள்ளது போல் தெரிகிறது. அதன்படி, தற்பொழுது வரும் மே 9ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குவியும் வழக்கு: அன்னபூரணியால் அப்செட்டில் நயன்தாரா?

முன்னதாக, இன்றைய தினம் (ஜனவரி 12 ) உலக முழுவதும் வெளியாக காத்திருந்த நிலையில், படக்குழு வெளியிட்டு தேதியை மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk