பிரபாஸுக்கும் கிருத்தி சனோனுக்கும் நிச்சயதார்த்தம்..? உண்மையை உடைத்த படக்குழு.!
பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை கிருதி சனோன் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ஒரு தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது.
அது என்னவென்றால், நடிகர் பிரபாஸ் தனது ‘ஆதிபுருஷ்’ பட இணை நடிகை கிருத்தி சனோனுடன் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தீயாக ஒரு தகவல் பரவி வந்தது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், தற்போது ஆதிபுருஷ் படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து பேசிய ஒருவர் “பிரபாஸ் மற்றும் கிருத்தி இருவரும் நண்பர்கள் மட்டுமே. கடந்த சில நாட்களாவே அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வைரலாகி வருகிறது. இந்த தகவல் எதுவும் உண்மை இல்லை வதந்தி தான்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
மேலும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த “ஆதிபுருஷ்” திரைப்படத்தை ஓம் ராவுத் இயக்குகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் , ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.