காணாமல் போன பவர் ஸ்டார் சீனிவாசன்…!வீடு திரும்பினார்…!
காணாமல் போனதாக கூறப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பினார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணாநகர் நகரில் வசித்து வருகிறார். இவர் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர், தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லையாம்.
இதனையடுத்து, இவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார்.அதன்பின்னர் கடந்த 6ம் தேதி முதல் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மகள் போலீசில் புகார் அளித்திருந்தார்
இந்நிலையில் சென்னையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பினார்.