சத்ரபதி சம்பாஜி மனைவியாக ராஷ்மிகா… மகாராணி ஏசுபாயாக கலக்கும் போஸ்டர்.!
சாவா படத்தில் மகாராணி யேசுபாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா: சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகனான சாம்பாஜி மகாராஜின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படம் ‘சாவா’. இந்தப்படத்தை பாலிவுட் இயக்குனர் லக்ஷ்மண் உத்தேகர் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தை தினேஷ் விஜனின் மடாக் பிலிம்ஸ் தயாரிக்க, படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சத்ரபதி சாம்பாஜியின் மனைவியான ராணி யேசுபாய் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நடிகர் விக்கி கௌஷல், மராட்டிய மன்னரும் போர்வீரருமான சத்ரபதி சம்பாஜி மகாராஜாக நடிக்கிறார். இந்த படம் 14 பிப்ரவரி 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
தற்பொழுது, ராஷ்மிகா மந்தனாவின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனுடன் இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் ஜனவரி 22ஆம் தேதி வெளியாகிறது.
அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், நாளை இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. இதனிடையே, இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளதால் அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram