LeoSuccessMeet [file image]
லியோ திரைப்படத்திற்கான வெற்றி விழாவில் நடிகர் விஜய் வருகை தந்த வீடியோ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தை பர்கா தமிழ் சினிமாவே ஒட்டுமொத்தமாக காத்திருந்த நிலையில், படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் 146 கோடி வரை வசூல் செய்து அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.
அதைப்போல படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் ரீதியாக லியோ படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது என்றே கூறலாம். குறிப்பாக படம் வெளியான 12 நாட்களில் 540 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், படம் வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்திற்கான வெற்றி விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மட்டுமே அனுமதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விழாவிற்கு நடிகர் விஜய்யும் வருகை தந்து குட்டி கதையை கூறுவார் எனவும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தான் விஜய் குட்டி கதை கூறுவார். ஆனால், லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற காரணத்தால் இந்த லியோ வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு விஜய் குட்டிக்கதை கூறவுள்ளார். விழாவிற்கு விஜயின் தயார் சோபனா, மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, அனிருத், தினேஷ் மாஸ்டர், நெப்போலியன், அர்ஜுன், மிஷ்கின் என அனைவரும் வருகை தந்துவிட்டார்கள்.
கடைசியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நடிகர் விஜய் பின்னணி இசை உடன் அரங்கத்தில் நுழைந்துள்ளார். அவர் நுழைந்தவுடன் அவரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தளபதி தளபதி என கரகோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…