போஸ்டர் அடி அண்ணன் ரெடி! ‘லியோ’ வெற்றி விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்!

LeoSuccessMeet

லியோ திரைப்படத்திற்கான வெற்றி விழாவில் நடிகர் விஜய் வருகை தந்த வீடியோ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த லியோ படத்தை பர்கா தமிழ் சினிமாவே ஒட்டுமொத்தமாக காத்திருந்த நிலையில், படம் கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் 146 கோடி வரை வசூல் செய்து அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

அதைப்போல படத்திற்கு விமர்சனங்கள் எப்படி வந்தாலும் ஒரு பக்கம் இருந்தாலும் வசூல் ரீதியாக லியோ படம் தமிழ் சினிமாவையே மிரள வைத்தது என்றே கூறலாம். குறிப்பாக படம் வெளியான 12 நாட்களில் 540 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், படம் வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், படத்திற்கான வெற்றி விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மட்டுமே அனுமதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விழாவிற்கு நடிகர் விஜய்யும் வருகை தந்து குட்டி கதையை கூறுவார் எனவும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

வழக்கமாக படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தான் விஜய் குட்டி கதை கூறுவார். ஆனால்,  லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற காரணத்தால் இந்த லியோ வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு விஜய் குட்டிக்கதை கூறவுள்ளார். விழாவிற்கு விஜயின் தயார் சோபனா, மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, அனிருத், தினேஷ் மாஸ்டர், நெப்போலியன், அர்ஜுன், மிஷ்கின்  என அனைவரும் வருகை தந்துவிட்டார்கள்.

கடைசியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நடிகர் விஜய் பின்னணி இசை உடன் அரங்கத்தில் நுழைந்துள்ளார். அவர் நுழைந்தவுடன் அவரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தளபதி தளபதி என கரகோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்