புகழ்பெற்ற வானொலி தொகுப்பாளர் மாரடைப்பால் காலமானார்.!
பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி (91) மாரடைப்பால் காலமானார். 19320-ல் பிறந்த அமீன் அகில இந்திய வானொலியில் 6 தசாப்தங்களாக பணியாற்றினார். நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் உடனடியாக எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அமீன் சயானி உயிரிழந்தார். அமீன் சயானியின் மறைவால் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்பொழுது, விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ள இவரது மறைவுக்கு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது சகோதரர் ஹமீத் சயானியால் பம்பாய் அகில இந்திய வானொலியில் அமீன் சயானி அறிமுகப்படுத்தப்பட்டார். அவர், தனது வாழ்க்கையில் 54,000க்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் சீரியல் நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்.!
குறிப்பாக சொன்னபோனால், 1952 ஆம் ஆண்டு தொடங்கி இலங்கை வானொலியிலும், பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இந்திய வானொலியின் “விவித் பாரதி” வர்த்தக ஒலிபரப்பிலும் இந்த பினாகா கீத்மாலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிப் பெரும் புகழுக்கு சொந்தக்காரர்.