பிரபல மலையாள நடிகர் மருத்துவமனையில் அனுமதி….!!!!
பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான சீனிவாசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சீனிவாசன் தான் டைரக்ட் செய்த ஒரு மலையாள படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென சீனிவாசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஏற்பட்ட அதிக ரத்த அழுத்தம் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4 டாக்டர்கள் கொண்ட குழுவினர் சீனிவாசனுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.