பிரபல பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி காலமானார்.!
மூத்த மலையாள நடிகை சுப்பலட்சுமி அவர்கள் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் காலமானதாக திரையுலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பிரபல மலையாள நடிகை சுப்புலட்சுமி (87) உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி (நவம்பர் 30) நேற்று உயிரிழந்தார்.
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, அம்மணி, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாட்டி வேடங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த சுப்பலட்சுமி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில், அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர் திலீப் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஓயாத மன்சூர் அலிகான் விவகாரம்…நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்.!
இவர் கர்நாடக இசைக்கலைஞரும் ஓவியராகவும் இருந்துள்ளார். மலையாள சினிமாவில் பிரபலமான துணை நடிகைகளில் ஒருவராக நடித்துள்ள சுப்பலட்சுமி, பெரும்பாலும் வயதான கதாபாத்திரங்களில் அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையில், நேர்த்தியாகவும் திறமையுடனும் நடித்திருப்பார்.