மூத்த கன்னட நடிகர் துவாரகீஷ் மாரடைப்பால் காலமானார்.!

Dwarakish passed away

Dwarakish: மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.

81 வயதான துவாரகிஷ், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மறைந்துள்ளார். கன்னட சினிமாவில் ஒரு முக்கிய நபராக இருந்த அவர், வித்தியாசமான பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர்.

துவாரகிஷின் மறைவுக்கு கன்னட சினிமா பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது, அவரது உடல் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, நாளை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என கூறப்படுகிறது.

1960 களில் திரையுலகில் நுழைந்த துவாரகீஷ், மேயர் முத்தனா மற்றும் ஆப்தமித்ரா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் கன்னட படங்களை இயக்கினார். 80 வயதை எட்டிய நிலையில், கன்னடத் திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கவுரவ டாக்டர் பட்டமும் பெற்று கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin