சினிமா

11 பசங்க நான் மட்டும் ஒரே வீட்டில் தங்கி இருந்தேன்! பூர்ணிமா சொன்ன அனுபவ கதை!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த சோகமான சம்பவங்கள் மற்றும் அனுபவ கதை பற்றி பேசி வருகிறார்கள். அப்படி தான் கூல் சுரேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் முன்னதாக கூறியிருந்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது பூர்ணிமா  தன்னுடைய வாழ்வில் நடந்த அனுபவ கதை ஒன்றை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” ஒரு சமயம் எனக்கு தங்குவதற்கு கூட வீடு இல்லை சென்னையில் அந்த சமயம் வீடு வாடகைக்கு கேட்கும்போது 2,000 அந்த ரூபாய்யையே நான் கஷ்ட்டப்பட்டு தான் கட்டவேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்தேன். பிறகு என்னைப்போலவே சிலரும் வீடு தேடிக்கொண்டு இருந்தார்கள். கிட்டத்தட்ட 11 ஆண்கள் நான் ஒருவள் நாங்கள் எல்லாரும் ஒரே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தோம்.

அந்த ஆண்கள் என்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை. அவர்களால் எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால் சில நேரங்களில் அவர்கள் எதாவது வாங்கிவிட்டு வந்து சாப்பிடுவார்கள் அதனை அப்படியே போட்டுவிடுவார்கள். அது மட்டும் தான் பிரச்சனை மற்றபடி எந்த பிரச்சனையும் அவர்களை வைத்து எனக்கு வரவே இல்லை.

ஞானவேல் ராஜா வன்மமான வார்த்தைகள் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுங்க! வேண்டுகோள் விடுத்த சசிகுமார்!

நான் இப்படி ஆண்களுடன் தங்கி இருந்ததை தவறாக புரிந்து கொண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவலை கொடுத்துவிட்டார்கள். பிறகு போலீஸ் வந்து என்னிடம் விசாரணை நடத்தியது விசாரணை நடத்திய பிறகு நான் செய்யும் வேலைகளை பற்றி அவர்களிடம் சொன்னேன். என்னுடைய அம்மா அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது.

அப்பா அம்மா இப்படியெல்லாம் ஒரே வீட்டில் இருப்பது சரியில்லை முதலில் கிளப்பி வா என்பது போல கூறினார்கள். நான் வேறு வீடு வாடகைக்கு பிடித்து அங்கு இருதேன்” என தெரிவித்து இருந்தார்.  இவர் பேசிய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பூர்ணிமா அனுபவ கதை வீடியோவைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது 11 பேருடன் தங்கியிருந்ததாகவும், தான் மிகவும் காப்பாற்றப்பட்டதாக உணர்கிறேன் என்றும் அவர் கூறினார். “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று உரிமைக்குரலை எப்படி கொடுத்தார்? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Recent Posts

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

28 minutes ago
“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

36 minutes ago
உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

1 hour ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

2 hours ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

2 hours ago