சினிமா

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா? சந்தோசமாக வழி அனுப்பிய மாயா!

Published by
பால முருகன்

கமல்ஹாசன் தொகுதி வழங்கி வரும் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 5 வாரங்கள் ஆகி இருக்கும் நிலையில், போட்டி சூடு பிடித்துள்ளது. கடைசியாக கடந்த வாரம் பலருடைய பேவரைட் போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் பெற்று கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்களை மரியாதையை இல்லாமல் பேசிய காரணத்தால் அவரை வீட்டை விட்டு பிக் பாஸ்வெளியேற்றியது.

பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு வெளியேறியவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பலரும் பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள் என்று சொல்லலாம். அவர் வெளியேற்றியதை குறித்து ரசிகர்கள் பலரும் இது தவறு சரியான ஒரு காரணம் இல்லாமல் அவரை எதற்காக வெளியேற்றினீர்கள்?  என கூறி வருகிறார்கள். அவர் வெளியாகி ஒரு வாரங்கள் ஆகப்போகும் நிலையிலும் கூட இன்னும் அவர் வெளியேறியது  குறித்து தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் என்றாலே இதுதான் சுவாரசியம்! நடிகர் ஹரிஷ் கல்யாண் பேச்சு!

இந்த நிலையில், கடந்த வாரம் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த வாரம் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று போட்டியிலிருந்து ஒருவர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாரும் இல்லை சுறு சுறுப்பாக விளையாடி வந்த பூர்ணிமா தான். இவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இந்த வாரம் நாமினேஷனில்  விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, பூர்ணிமா, ஐஷு மற்றும் ஆர்ஜே பிராவோ உள்ளிட்ட ஆறு போட்டியாளர்கள் இருந்தார்கள். இதில் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார். அவரை அவருடைய நெருங்கிய தோழியாக வீட்டில் இருந்த மாயா கட்டியணைத்து பாசத்துடன் வழி அனுப்பி வைத்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு யூடியூபில் குறும்படங்கள் மற்றும் சின்ன சின்ன படங்களில் நடித்து கொண்டிருந்த பூர்ணிமாவுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது. எனவே, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிய வந்தவுடன் கண்டிப்பாக அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

5 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

5 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

6 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

7 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

9 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

9 hours ago