பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஷு வீட்டை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா,அர்ச்சனா, பூர்ணிமா, தினேஷ், ஐஷு மற்றும் ஆர்ஜே பிராவோ உள்ளிட்ட ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இதில் பூர்ணிமா தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐஷு வீட்டை விட்டு வெளியேறினார்.
அவர் வீட்டை விட்டு வெளியேறியவுடன் நிக்சன் சற்று கண்கலங்கி நின்று கொண்டு இருந்தார். அவருக்கு ஆறுதலை தெரிவித்துவிட்டு ஐஷு வீட்டை விட்டு சென்றார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக தினேஷ் பொறுப்பேற்று இருக்கிறார். வழக்கமாக தினேஷ் எதாவது பேசினாலே போட்டியாளர்களுக்கும் அவருக்கும் சண்டை வருவது வழக்கம்.
எனவே, இந்த வாரம் அவர் கேப்டனாக ஆகியுள்ள காரணத்தால் என்னென்ன சண்டைகள் வாக்கு வாதம் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. அதைப்போல மற்றோரு எதிர்பார்ப்பு என்னவென்றால், நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரெல்லாம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறப்போகிறார்கள் என்பது தான்.
இது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பூர்ணிமா பிக் பாஸ் குறித்து விமர்சித்து பேசியிருப்பது ரசிகர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன பேசினார் என்றால் ” பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு நடந்த சீசன்களில் எல்லாம் மிகவும் வலிமையான போட்டியாளர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள்.
அவர்களுக்கு பதிலாக சும்மா சம்மந்தமே இல்லாதவர்கள் எல்லாம் பைனலில் வந்து நிற்பார்கள்” என சக போட்டியாளர்களான மாயா மற்றும் ரவீனா ஆகியோரிடம் பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பூர்ணிமா வாயை வைத்து கொண்டு சும்மா இருந்தாலே அவர் இறுதிப்போட்டி வரை பயணம் செய்யலாம் என்பது போல கூறி வருகிறார்கள்.
இதைப்போலவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீதிமன்ற டாஸ்க்கின் போது தன்னிடம் மட்டும் பிக் பாஸ் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் இது தவறு என்பது போல சுட்டிக்காட்டி பேசி இருந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…