பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சண்டைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சில விஷயங்களும் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக மாயா, பூர்ணிமா இருவரும் பேசும் கிசு கிசு, போட்டியாளர்கள் மாற்றி மாறி கலாய்ப்பது என நடந்து வருகிறது. மேலும், வீட்டிற்குள் விஸ்ணு மற்றும் பூர்ணிமா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். ஆனால், காதலிப்பதாக இருவரும் வெளிப்படையாகவே கூறவில்லை இருந்தாலும் இருவருமே நெருக்கமாக பழகி வருவதால் இருவருக்கும் இடையே காதல் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
அதற்கு உதாரணமாக இன்று பூர்ணிமா மற்றும் விஸ்ணு இருவரும் தனியாக அமர்ந்து கொண்டிருந்த போது தினேஷ் தன்னை ப்ரோமோ பொறுக்கி என்று கூறியதை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். “தினேஷ் என்னை பொறுக்கி என்று சொன்னது போல நான் பொறுக்கி எல்லாம் இல்லை. என்னுடைய மனத்திற்ககு பிடித்ததை நான் செய்வேன்.
நான் எந்த பெண்ணை வீட்டில் காமிக்கிறேனோ அந்த பெண்ணை தான் எனக்கு திருமணம் செய்து வைப்பார்கள். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நான் இப்பொது வரை சிங்கிளாக தான் இருக்கிறேன் என்று கூறினார். இவர் இப்படி பேசிக்கொண்டிருப்பதை ரசித்து பார்த்த பூர்ணிமா யாருங்க நீங்க? என்று கேட்க நான் விஸ்ணு என்றும் அவர் பதில் அளித்தார்.
பிறகு பூர்ணிமா ” நீங்கள் இப்படி எல்லாம் பேசுவது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன் எனக்கு உணர்வு இருக்கிறது. உங்கள எனக்கு பிடித்திருக்கிறது. நான் என்னுடைய மனதில் படும் விஷயங்கள் அனைத்தையும் உங்களிடம் சொல்கிறேன் இல்லை என்றால் அது இல்லை என்று நீங்களே சொல்லிவிடுங்கள். பிடிக்கவில்லை என்றாலும் என்னிடம் சொல்லிவிடுங்கள்” என விஸ்ணுவிடன் பூர்ணிமா கேட்கிறார். அதற்கு விஸ்ணுவும் தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தார்.
பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் தெரியுமா? விஜய் டிவி வெளியிட்ட புது வீடியோ!
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டையை போல காதலும் இருக்கும். இதுவரை நடந்த எல்லா சீசன்களிலும் இரண்டு போட்டியாளர்கள் காதலித்தும் இருக்கிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடந்த சீசன் அமீர் பாவனி இருவரும் காதலித்து விரைவில் திருமணமும் செய்து கொள்ளவிருக்கிறார்கள். ஆனால், 7-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இன்னும் யாரும் யாரையும் காதல் செய்யாமல் இருக்கிறார்கள்.
மேலும், 6-வது வாரமான இந்த வாரம் இந்த வாரம் எலிமினேஷனுக்கு விசித்ரா, ரவீனா தாஹா, மணிச்சந்திரா, பூர்ணிமா, கானா பாலா, ஆர்ஜே பிராவோ, அக்ஷயா உதயகுமார் மற்றும் சரவணன், விக்ரம் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். இதில் யார் குறைவான வாக்குகளை பெறுவார்களோ அவர் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…