வெற்றிமாறன் தயாரிப்பில் கவின்.. ‘மாஸ்க்’ பட பூஜை வீடியோ வெளியீடு!
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.
சமீபத்தில் வெளியான ‘ஸ்டார்’ படத்தை தொடர்ந்து நடிகர் கவின், அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘கவின் 07’ படத்திற்கு மாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இப்படத்தில் கவின் நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
So this happened… 🙂
Double thank you, #Vetri sir.🙏🏼
For taking the time to grace us with your presence in our movie “Star”.
For breathing life into our fiction and making it a captivating reality.#TheUniverseDoesFallInLoveWithAStubbornHeart 🙂
Proud to be associated with… pic.twitter.com/VvD8CFPZ2L
— Kavin (@Kavin_m_0431) May 17, 2024
தற்பொழுது, நேற்று நடைபெற்ற பூஜையின் கிளிம்ப்ஸ் வீடியோவை கவின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கவின் குறும்படத்திறகாக பிஹைண்ட் வூட்ஸ் கோல்ட் மெடல் விருதுகளில் சிறந்த குறும்பட விருதை வென்றார். அந்த குறும்படத்தில் உதவியாளராகப் பணியாற்றிய விகர்ணன் அசோகன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
MASK 🎭 pic.twitter.com/SDKArRKavF
— Kavin (@Kavin_m_0431) May 18, 2024
இப்படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த படத்தை வெற்றிமாறன் தனது சொந்த நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கவுள்ளார். இதற்கு முன், காக்கா முட்டை, விசாரணை ஆகிய படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் முதல் தயாரிப்பு முயற்சியான ஃபிலமென்ட் பிக்சர்ஸின் கீழ், இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் ‘ப்ளடி பிச்சைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார்.