இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் உள்ளது.
இப்படம் திருவனந்தபுரத்தில் இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் டி.ஜே.ஞானவேல், நடிகை மஞ்சு வாரியர், வி.ஜே ரக்ஷன் ஆகியோருடன் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், மேக்கப் கலைஞர் ரஷீத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தற்போது, படக்குழுவினர் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, ரஜினிகாந்த் முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். 2024 பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…