சினிமா

பருத்திவீரன் விவகாரம்: வேண்டாம் தரம் தாழ்ந்த மனநிலை! ஞானவேலுக்கு எச்சரிக்கை விடுத்த பொன்வண்ணன்!

Published by
பால முருகன்

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம்.

ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார்.பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” எனவும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். பின் ஞானவேல் சொல்வதில் ஒன்றில் கூட உண்மை இல்லை என இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருந்தார்.

ஞானவேல் சொல்வது உண்மை இல்லை! நான் சொன்னா புயல் கிளம்பிடும்- அமீர்!

அதன் பிறகு இந்த விவகாரம் குறித்து அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்டோர் பேசினார்கள். அவர்களை தொடர்ந்து பருத்திவீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பொன்வண்ணன் இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியீட்டு இருக்கிறார். அதில் ” ‘பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன் அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.

அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்.

பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு . தொடர்ந்தது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் … ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.

பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது. இதனால்தான்,பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் , தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது.

ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் . உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக .. திருடன், வேலைதெரியாதவர். என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது.. தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும், அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை.. இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.! பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற
ஆசைகளுடன்” என கூறியுள்ளார்.

ஞானவேல் ராஜா வன்மமான வார்த்தைகள் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுங்க! வேண்டுகோள் விடுத்த சசிகுமார்!

இதைப்போல சசிகுமார் “அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்”  என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

17 minutes ago

‘பகலில் ஒரு இரவு’ புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்.!

சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…

24 minutes ago

பார்க்கிங் விவகாரம் : பிக் பாஸ் தர்ஷன் அதிரடி கைது!

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…

46 minutes ago

“அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல” – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!

கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

56 minutes ago

எப்படிப்பா ஆடுற? ஒன்னும் புரியல! அபிஷேக் சர்மாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

கொல்கத்தா :  அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…

2 hours ago

எலோன் மஸ்க் DOGE-யிலிருந்து வெளியேறுவாரா? டொனால்ட் டிரம்ப் விருப்பம் இது தான்.!

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…

2 hours ago